web log free
June 27, 2026

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று தீர்மானம்

நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை அடுத்து, ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு தினமொன்று ஒதுக்கப்படாமை குறித்து நாடாளுமன்றில் நேற்று அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, இன்றைய தினம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது, இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.

எனினும், ஒன்றிணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் குழப்பம் ஏற்படுத்தியதால் நாடாளுமன்றை சபாநாயகர் இன்று வரை ஒத்திவைத்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd