web log free
June 05, 2023

முன்னாள் எம்.பி எஸ்.அருள்சாமி காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப-தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சந்தனம் அருள்சாமி காலமானார்.

டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை காலமானார். 30 வருடகாலமாக, நேரடி அரசியலில் ஈடுபட்டிருந்த அவர், நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில், சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. 

அருள்சாமிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவையடுத்து, அவருடைய வெற்றிடத்துக்கு அருள்சாமி நியமிக்கப்பட்டார். அத்துடன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி மற்றும் இந்துகலாசார அமைச்சராகவும் அவர் பதவிவகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 06 January 2019 08:35