web log free
December 07, 2023

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (ஆகஸ்ட் 31) நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் பலபிட்டிய, வலகெதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வேனில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.