web log free
April 04, 2026

தயாசிறி தவிர்ந்த ஏனையோருக்கு அழைப்பு

குருநாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர தவிர்ந்த தொகுதி அமைப்பாளர்களை இன்று (08) டாலி வீதியிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். 

தயாசிறி ஜயசேகர பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளராக பதவி வகிக்கிறார்.

மேலும் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd