web log free
September 30, 2023

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்தி சேவை வினவிய போது தெரிவித்தார்.

இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.