web log free
May 10, 2025

வட்டிப் பணப் பரிவர்த்தனை தகராறு : காலி வீதியின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் சண்டை

காலி வீதியின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் இடையூறை ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட 12 பேர் நேற்று வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார் இரு தரப்பிலும் இருவர் காயமடைந்து காணப்பட்டதாகவும் கூறினர்.

இவர்களது உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களும் கொரலலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Last modified on Friday, 15 September 2023 09:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd