தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி Marc-André Franche-வை நேற்று (15) கொழும்பில் சந்தித்துள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடப்படாமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் இதன்போது அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கமைய, குறித்த விடயத்தை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதாக ஐ.நாவின் இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளமை தொடர்பில் தரவுகளுடனான ஆவணமொன்றை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி Marc-André Franche-விற்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. v