web log free
September 30, 2023

கணேமுல்ல சஞ்சீவவின் கும்பல் : இலங்கை முழுவதும் 39 கொலைகள்

இலங்கை முழுவதும் 39 கொலைகளை அவரது கும்பல் செய்துள்ளதாக கணேமுல்ல சஞ்சீவவின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் சஞ்சீவவுக்கு தெரிந்தே நடந்தவை என்றும், சில கொலைகள் பழிவாங்கும் செயல் என்றும், சில கொலைகள் ஒப்பந்தங்கள் எனவும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சஞ்சீவ மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.