web log free
November 25, 2024

களனிப் பல்கலைக்கழகத்தில் 97 வயதில் பட்டம்பெற்ற மூதாட்டி

களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிலையத்தில் கல்விகற்ற மூதாட்டியே இவ்வாறு முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக வயதான மாணவர் என்ற பெருமையை 97 வயதான விதானகே அசிலின் தர்மரத்ன பெற்றுள்ளார்.

இவரது பட்டப்படிப்பிற்கான பாடங்கள் 7 பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. பாலி நியதியில் பௌத்த தத்துவம், இலங்கையில் பௌத்த கலைகள் மற்றும் கட்டிடக்கலை, பௌத்த உளவியல், பௌத்த தத்துவத்தில் பொருளாதாரம், தேரவாத பாரம்பரிய வரலாறு மற்றும் தர்மம் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியதுடன் பௌத்த நெறிமுறைகளது கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள் மற்றும் ஆராய்ச்சி முறைகளை கொண்டது.

அவரது ஆய்வறிக்கை எம்பெக்கே தேவாலயத்தின் மர வேலைப்பாடுகளில் கடந்தகால வாழ்க்கை முறைகளை உள்ளடக்கியுள்ளது.

இளம் வயதில் அசிலின் தர்மரத்ன ஒரு நொத்தாரிசாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் இலக்கிய பாதையில் கவனத்தை திசைதிருப்பினார். இவருக்கு 6 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது 94 ஆவது வயதில் வித்யோதயா பல்கலைக்கழகத்தில் திரிபிடகம் மற்றும் பாலி மொழி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd