web log free
May 10, 2025

நாடாளுமன்ற தெரிவுகுழு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்பகல் வெளியிட்டார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் 8 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜயம்பதி விக்ரமரட்ன, ஆஷு மாரசிங்க, காவிந்த ஜயவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் அங்கத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd