web log free
June 07, 2023

ஞானசார தேரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை கண்டிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.