சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருக்கும் போது சுற்றுலா அமைச்சின் பணிகளை பார்வையிட நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் எவ்வித அதிகாரமும் இன்றி காணி அமைச்சின் பணிகளை பார்வையிடச் சென்று அலுவல்களை மேற்கொண்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு மாத்திரமே உரிய இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த வாரம் காணி அமைச்சுக்குச் சென்று அதன் நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து விசேட கலந்துரையாடலை நடத்தினார்.
அமைச்சின் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சில காணி உறுதிப்பத்திரங்களை திடீரென வழங்குமாறும், பத்திரப்பதிவுகளை ஒரு வாரத்திற்குள் பூர்த்தி செய்யுமாறும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று நாடு திரும்பியுள்ளார்.