web log free
March 29, 2026

பதுரலிய பாடசாலைக்கருகில் 13 கைக்குண்டுகள்

பதுரலிய பகுதியில் உள்ள பாடசாலை கட்டத்துக்கு அருகில் இருந்து 13 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாடசாலைக்கு அருகில் காணப்பட்ட பொதியொன்றை பாடசாலை காவலாளி சோதனையிட்ட போது இந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாடசாலை அதிபரின் ஊடாக பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், குறித்த பொதி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd