web log free
June 04, 2026

விபத்துக்கு உள்ளான பஸ் சாரதி மற்றும் நடத்துனர் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்  

 

கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் (06) லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் லங்காம பஸ் மீது மரம் முறிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்கு முகங்கொடுத்த பேருந்தின் சாரதி மற்றும் உதவி சாரதிக்கு ஒரு வாரகால பணி விடுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பஸ் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் சாரதி உதவியாளர் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd