ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது பொதுச் செயலாளர் பதவியை மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் காரணமாக கட்சியின் ஆசன அமைப்பாளர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பதவி வழங்கப்படவுள்ள ரவி கருணாநாயக்கவுக்கு மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பதவியை மாற்ற வேண்டாம் என கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளனர்.
ரவி கருணாநாயக்கவை சமாளிப்பது சாத்தியமில்லை எனவும் அவருக்கு அந்த பதவி வழங்கினால் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அந்த குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிலைமை இப்படி இருக்கும் போதிலும், பாலித ரங்கேபண்டாரவும் தனது பதவியை பாதுகாக்க தனியான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு முன்னர் இந்த பிரச்சினைகளை தீர்க்குமாறு கட்சியின் தலைமைத்துவம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.