web log free
June 14, 2026

ரவுடித்தனமாக செயற்பட்ட சஜித் அணி எம்பிக்கு நாடாளுமன்றுக்குள் நுழையத் தடை!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு வார காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சுமத்தி பாராளுமன்றத்தில் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் சத்தம் எழுப்பி அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், செங்கோலைத் தொட்டதும் பாரிய குற்றமாகும் என சபாநாயகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல கேள்வி கேட்கும் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சபையின் நடுவில் வந்து இந்த ரவுடித்தனமான செயலில் ஈடுபட்டார்.

அதன் காரணமாக நாடாளுமன்றத்தை சிறிது நேரம் ஒத்திவைக்கவும் சபாநாயகர் ஏற்பாடு செய்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd