web log free
June 05, 2023

பெருந்தோட்ட மாணவர்களுக்கும் புலமைபரிசில் பரீட்சை வழங்கும் நிகழ்வு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் ஊவா மாகாணத்திலிருந்து புலம்பெயர் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு புதுளை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (06) நடைபெற்றது.

 

இந் நிகழ்விற்கு அதிதிகளாக தொலைதொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்பு விளையாட்டுதுறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ¸ பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் உட்பட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யபட்ட பாடசாலைகளின் மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

இதன்போது, பெருந்தோட்ட மாணவர்களுக்கும் இந்த புலமைபரிசில்கள் வழங்கபட்டமை குறிப்பிடதக்கது.