web log free
June 07, 2023

குருநாகலில் வைத்தியர் ஒருவர் கைது

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேகு சியாப்தீன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய குறித்த வைத்தியரின் சொத்து விவரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறித்த வைத்தியர் தொடர்பில் குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.