இலங்கைக்கு வரும் 07 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 07 நாடுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வருகை தருவதாக தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகளால் ஏழு நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது இலவசமாக விசாவைப் பெற முடியும்.