பாரியளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களான நந்துன் சிந்தக மற்றும் குடு சாலிந்து ஆகிய சந்தேக நபர்களை இரகசிய பொலிஸாரின் பிடியில் இருந்து கடத்திச் செல்லும் அதிநவீன திட்டம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நோக்கத்திற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தினுள் புகுந்து இரசாயன தாக்குதல் நடத்தி விடுவிக்க பூரண திட்டம் தயாரித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் பயிற்சி பெற்ற குழுவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நேற்று (24) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்துள்ளனர்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றில் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.