web log free
June 18, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய திட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று தயாராகி வருவதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவொன்றை அமைப்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால், கட்சியின் பிரசாரப் பணிகளில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு பாரிய நஷ்டம் ஏற்படும் என ஜனாதிபதிக்கு அறிவிக்க உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வழிநடத்தல் குழுவை கூடிய விரைவில் கூட்டி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் மேற்கண்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd