web log free
May 23, 2026

ஊழியர்கள் குறித்த விசாரணை TIDயிடம்

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை 27ஆம் திகதியான நாளை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd