இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்குவாதங்கள் தொடர்பான குழு அறிக்கை தயாரிக்கப்பட்டு குழு உறுப்பினர்களின் கையொப்பமிட்ட பின்னர் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
குழு உறுப்பினர்கள் இன்று இறுதி அறிக்கையில் கையொப்பமிடுவார்கள் என்று குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ "ஏசியன் மிரருக்கு" தெரிவித்தார்.
இதேவேளை, குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்றைய பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் போகலாம் எனவும் அவ்வாறு இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகரிடம் கையளிப்பதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடவோ அல்லது குறைவாகவோ ஒழுக்கமின்மையுடன் நடந்து கொண்டதாகவே தோன்றுகின்றது எனவும் அஜித் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.