web log free
February 24, 2026

இரண்டு அமைச்சர்களின் அமைச்சு வரவு செலவை தோற்கடிக்க முடிவு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று விசேட கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், குறித்த தீர்மானம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும், பொறுப்பான அமைச்சர்களை எச்சரித்து இதனைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே, இறுதி முடிவை பட்ஜெட் குழு வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd