web log free
December 10, 2023

இலங்கை வானில் விண்கல் மழை!

லியோனிட் விண்கல் மழையை இலங்கையில் அதிகபட்சமாக பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால் நாளையும் (18) நாளை மறுதினமும் (19) விண்கல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு 10-15 விண்கற்கள் வரை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்கு மேல் கிழக்கு அடிவானத்தில் உள்ள சிம்ம ராசியை பார்க்கும் போது இந்த விண்கல் தென்படும் என்று கூறப்படுகிறது.