web log free
March 31, 2026

ஜனவரி தொடக்கம் மீண்டும் உயரும் பெற்றோல் டீசல் விலை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலை நானூற்று இருபது ரூபாவை தாண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண நேற்று (16) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெற்றோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க இந்த சபையில் முன்வைத்தார்.

அப்படியானால் பெற்றோல் டீசல் விலை அதிகரிக்குமா என உங்களிடமிருந்து நான் அறிய விரும்புகின்றேன்' என பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எவ்வித பதிலையும் வழங்காமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

'அப்படி இருந்தால், அது இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதன்படி, ஜனவரி மாதம் முதல், ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் 420 ரூபாவாக உயரும் என எதிர்பார்க்கலாம்' என சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd