web log free
December 10, 2023

இலங்கை - இந்திய மித்ரா சக்தி 2023

இந்தியா - இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் நேற்று (16) ஆரம்பமானது.

'மித்ரா சக்தி -2023' எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

120 வீரர்களைக் கொண்ட இந்திய படைப்பிரிவில் மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய விமானப்படையை சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையை சேர்ந்த 5 வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கூட்டு எதிர்வினைகளை ஒருங்கிணைப்பது இந்த பயிற்சியின் நோக்கமாகும். 

தாக்குதல், தேடுதல் மற்றும் அழித்தல் போன்ற உத்தி சார்ந்த நடவடிக்கைகளை இரு தரப்பினரும் மேற்கொள்ளவுள்ளனர்.

இதனை தவிர இராணுவ தற்காப்பு கலைகள், துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

யோகா உடற்பயிற்சியும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

மித்ரா சக்தி - 2023 பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் தவிர ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் பயன்படுத்தப்படவுள்ளன.

ஹெலிபேட்களை பாதுகாப்பது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பான ஒத்திகைகளும் இடம்பெறவுள்ளன. 

இந்த பயிற்சி, அண்டை நாடுகளுக்கும் இடையே வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.