web log free
April 22, 2026

அநுர மற்றும் சஜித்திடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் தயார்

தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருப்பதாக ஜோதிடர் அச்சல திவாகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.வி.பியின் பொருளாதார கோட்பாட்டின் பிரதான எதிரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் பொருளாதாரத்திலும், ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரத்திலும் முரண்பாடுகள் இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தி பொன்சேகாவுடன் தேர்தல் பிளவுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd