எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து அந்த அரசியல் நடவடிக்கையை அவர் ஏற்பாடு செய்திருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக ரொஷான் ரணசிங்கவை நியமிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.