இலங்கையில் ஆறாயிரம் பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் மூவாயிரத்தில் ஒருவர் எயிட்ஸ் நோயாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே ஜயசுமண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சரான பின்னர் தான் ஜனாதிபதியானார் என்று கூறினார். அந்த அடிச்சுவடுகளைப் பின்பற்ற ரமேஷ் பத்திரன அவர்களுக்கு வலிமை கிடைக்க வேண்டுகிறேன். மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய மசோதா பலவீனமாக உள்ளது. அந்த சட்டத்தில் தாமதமின்றி திருத்தம் கொண்டு வர வேண்டும். நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் 50 மருந்தகங்களை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே ஆரம்பித்திருந்தோம்.150 வகையான புதிய மருந்துகளை வழங்க முடிந்தது. தகவல் தொழில்நுட்ப அமைப்பில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், விரைவாக விசாரித்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. தற்போது 6000 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்றார்.