தென்கிழக்கு வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 100 வரை கனமழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75 டிகிரி அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும், இடியுடன் மழை பெய்யக் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.