web log free
February 07, 2026

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானம் தேவை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையால் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd