web log free
February 07, 2026

பேருவளையில் 13 சந்தேக நபர்கள் கைது

பேருவளையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் முழுவதும் இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 630 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது பாதுகாப்பு படையினரின் சீருடைகள் ஒத்த உடைகள் மற்றும் வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd