இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, வேலை நேரம் குறைதல், கடைகளுக்கு வாடிக்கையாளர் வருகை குறைதல், குறைந்த விற்பனை, வேலை இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் தற்காலிக இடைநிறுத்தம், அத்துடன் கால்நடை தீவனம், எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள குடும்பங்கள் எவ்வாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பதை அறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.