web log free
September 03, 2025

விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29ஆம் திகதி) காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை விமானப்படையில் கடெட் அதிகாரியாக இணைந்த சுமங்கல டயஸ், கொழும்பு நாளந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

இதேவேளை, இன்றுடன் ஓய்வுபெறும் கபில ஜயம்பதி, எயார் சீப் மார்ஷலாக (Air chief marshal) தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நேற்று (28ஆம் திகதி) முதல் அமுலாகும் வகையில் எயார் சீப் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd