எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்காக குண்டு துளைக்காத வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வேண்டி அமைச்சரவையில் நேற்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனை தொடர்பில் கண்காணிக்கு அறிக்கையொன்றை முன்வைப்பது அவசியம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதை அடுத்த வாரம் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.