web log free
April 06, 2026

புதிய அமைச்சர்கள் இருவர், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி. ஹெரிசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க வௌிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd