web log free
March 13, 2026

பாராளுமன்றை கலைப்பது குறித்து பேசப்படுவதாக தகவல்

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இப்போதும் கூட சில பிரிவினர் மற்ற அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித ஆயத்தங்களும் இடம்பெறவில்லை என நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd