web log free
August 03, 2025

ஷான் இடத்தில் சஜின்வாஸ்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொடை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் ஷான் விஜயலால் டி சில்வாவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று (03) காலி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடிய அனைத்து மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களும் தாம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததுடன் அம்பலாங்கொடை தொகுதிக்கு சஜின் டி வாஸ் குணவர்தனவே பொருத்தமானவர் என ஏகமனதாக தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd