web log free
November 25, 2024

ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத் தொகை அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக தற்போது வழங்கப்படும் மருத்துவ கொடுப்பனவுகள் 2024 ஜனவரி (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி வினைத்திறனுடன் செய்வதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.

இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் 21 வயதுக்குட்பட்டோருக்கான கண் அறுவை சிகிச்சைக்கும் தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. 

நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற நகரத்திற்கு வருவதைக் குறைக்கும் வகையில், ஜனாதிபதி மருத்துவமனை நிதியில் பதிவு செய்யும் எளிய முறை இந்த ஆண்டு 2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd