இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டில் 120 பில்லியன் ரூபா இலாபப் பங்கினைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் கூறிய போதிலும், கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலைக்கு ஏற்ப விற்பனைச் செயன்முறையை கருத்தில் கொண்டு கூட்டுத்தாபனம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது.
சீன எரிபொருள் நிறுவனங்களான சினோபெக் நிறுவனத்துடனான போட்டியைக் குறைப்பதால் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் லாபம் அபாய நிலையில் இருப்பதாக சில தரப்பினர் கூறுவதில் உண்மை இல்லை என்று கூட்டுத்தாபனம் கூறுகிறது.
எனவே இதனை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஈவுத்தொகையை மேலும் அதிகரிப்பதன் மூலம் எதிர்கால இலக்குகளை அடைய கூட்டுத்தாபனம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் வருடாந்த போனஸ் அல்லது வேறு கொடுப்பனவு எதுவும் வழங்குவதில்லை என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்திருந்தார்.