செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்காக இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
நேற்று (08) முற்பகல் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
செங்கடலைப் பாதுகாக்க கப்பல்களை அனுப்புவது பற்றி சமூக வலைத்தளங்களில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.