ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று (09) இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தினால் தான் இந்த தீர்மானத்திற்கு வரவில்லை என்றும், சஜித் பிரேமதாசவுடன் தான் எப்போதும் இருப்பேன் என்றும், தமக்கு ஐக்கிய மக்கள் சக்தியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி வலியுறுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அரசியலில் இருந்து விலகும் தீர்மானத்திற்கு அவரது தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கட்சியின் உள்ளக அரசியல் தீர்மானங்கள் தாக்கம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.