ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான முகாமைத்துவக் குழுவில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம் திகதி காலியில் இருந்து தனது பிரச்சார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தி அதன் பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.