ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டதை எடுத்து அந்த பதவியை எதிர்பார்த்திருந்த ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் மிகவும் கவலையடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ரவி கருணாநாயக்க தனக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில், 2024ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிகொத்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் அண்மையில் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் வைத்து பாலித்த ரங்கே பண்டாரவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.