web log free
April 18, 2026

வைத்தியசாலைகளில் இராணுவம் குவிப்பு

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்கினால், வேலை நிறுத்தம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்கும் நோக்கில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd