web log free
March 26, 2026

ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து, 2ஆவது தடவையாக நரேந்திர மோடி இன்று மதியம் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

புதுடில்லியில் நடைபெறும் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பிம்டெக்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றவுள்ளனர்.

எனினும், இந்த பதவியேற்பு நிகழ்வுக்கு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd