web log free
March 18, 2026

20 இலங்கையர்கள் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட போது கடந்த வாரம் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு முதல் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்ற 186 பேர் இதுவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd