web log free
March 22, 2026

விசேட தெரிவுக் குழு நான்காம் திகதி கூடும்


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு, எதிர்வரும் நான்காம் திகதி மீண்டும் கூட உள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ள தெரிவுக்குழுவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி மற்றும் அரச புலனாய்வு துறையின் பிரதானி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறையின் பிரதானியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd