தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம சமர்ப்பித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம ரம்புக்வெல்லவுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இன்று ஆஜரான அமைச்சர் கெஹலியவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கைது செய்யப்பட்டார்.